கண்ணில் படாத உலகம் ...........

கண்கள் இல்லாத மனிதர்களின் உலகம்
வியப்பானது, அழகானதும் கூட..
அவர்கள் காணும் உலகு நம்மால் காண முடியாதது..
உணர்தலில் மட்டுமே உருவம் இருக்கிறது
சாதி மதம் இனமில்லை..
அவர்கள் காணும் நிறமும், உருவமும்
தனித்தன்மை மிக்கன
நம் கட்டுப்பாட்டைக் கடந்தன..
அவர்களுக்கு மட்டுமேயான
ஒரு புது உலகம் இருக்கிறது
அதில் நாம் வேற்றுகிரகவாசியாகக் கூட
இருக்கலாம்..
ஒவ்வொருவருக் குள்ளும்
ஒவ்வொரு கற்பனை ஓட்டம்
ஏழு அதிசயங்கள்
பார்வை உள்ளவருக்குதான்
எட்டாத அதிசயங்கள்
அவர்களின் எண்ணத்தில்..