யார் வீரன்?

எதிரியின் வீரம் கண்டு அவன் காலடியில்
விழுபவன் வீரனல்ல!
வீழ்வோம் என்று தெரிந்தும் எதிர்த்து
நிற்பவனே வீரன்!

விழுந்ததற்காக வீண் கவலை கொண்டு
விம்மி அழுபவன் வீரனல்ல!
விதையாய் விழுந்து விருட்சமென எழுந்து
வீறுநடை போடுபவனே வீரன்!

காற்றடித்ததும் களைந்து போகும்
மேகமாய் இருப்பவன் வீரனல்ல!
மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு-மின்னலாய்
புறப்பட்டு பளிச்சிடுபவனே வீரன்!

தண்ணீர் ஊற்றியதும் அணைந்து விடுபவன்
தனியொரு வீரனல்ல!
நீரு பூத்த நெருப்பாய் இருந்து
தீப்பொறியாய் சீறி எழுபவனே வீரன்!