உலகத் தமிழராய்ச்சி மாநாடு

அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜனவரி 29  பிப்ரவரி 2015 அன்று  கோலாலம்பூரில் மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல் நஜிப் கரங்களால் துவங்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெற்றது. இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக இருந்தது.

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைத்தனர். 

 

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை

சிங்கப்பூர்