ஜி.டி. நாயுடு விருது

தமிழ் இலக்கியத்திற்கு கரிகாற்சோழன் விருது , தமிழ் ஆய்வுப்பணிகளுக்கு உ.வே.சா விருது வரிசையில் தமிழர் அறிவியலுக்கு அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பில் ஆண்டு தோறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு புத்தகத்திருவிழாவில்  வழங்கப்படவுள்ளது .

தமிழகத்தில் அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் இன்னும் பல இளைஞர்களை புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் 
இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதாளர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். தமிழகத்திலுள்ள அணைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் , தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக்கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுகூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஆய்வின் சுருக்கத்தையும், பெயர்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான தனது 10 மிகச் சிறந்த கட்டுரைகள் இடம்பெற்ற இதழ், வெளியான தேதி போன்ற முக்கியக் குறிப்புகளை ஆய்வாளர் பரிசீலனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவேண்டும்.இவ்விபரங்களை ஆய்வாளர் நேராகவும் ஆய்வாளருக்காக மற்றவரும் அனுப்பிவைக்கலாம்.

அறிவியல் துறையில் ஆழத்தடம் பதித்த வல்லுனர்களாக விளங்கும் ஐந்து தகுதிபெற்ற அறிவியல் அறிஞர்களின் தலைமையில் ஒரு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் ,வெற்றியாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படும் .
இவ்விருது ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளாம் 16.08.2016 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிற நிறைவு நாள் நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் ( இஸ்ரோ ) இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் வழங்கப்படவுள்ளது. சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையின் அங்கமான சிராங்கூன்  டைம்ஸ் மாத இதழின் ஆசிரியர் குழுவினர்  நிகழ்வில் பங்கு பெறவிருக்கிறார்கள் .

ஆய்வுக்குறிப்புகளையும் தொடர்புள்ள அனைத்து அவசியப்படும் ஆவணங்களையும் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி 05.08.2016 ஆகும்.
www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் இவை பற்றிய முழுவிபரங்கள் உள்ளன. 

முகவரி : மக்கள் சிந்தனைப்பேரவை,A -38, சம்பத் நகர், ஈரோடு - 638 011.மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org. தொலைபேசி எண்கள் : 0424 2269186, 88835 25553.