இணையதளத்தில் சிங்கை தமிழ் இலக்கியங்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்  மாணவர்கள் சங்கம் நடத்திய “ இணையதளத்தில் சிங்கை தமிழ் இலக்கியங்கள்”…

தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் “இணையதளத்தில் சிங்கை தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறப்பாக நடந்தது…
இணையத்தில் சிங்கைத் தமிழ் இலக்கியங்கள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில்உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் ஆய்வினை படைத்தார்கள். தங்களின்ஆய்விற்கு மின்மரபுடைமைத் திட்டம் பெரிதும் பயன்பட்டது என்று மாணவர்கள் தெரிவித்தார்கள்…

சிறந்த எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு.மாலன் “உலகத் தமிழ்இலக்கியத்தில் சிங்கைத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறப்புரைஆற்றினார். சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகளை பகிர்ந்துகொண்டார்…

நிகழ்ச்சியில் முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்களின் “சி.கு மகுதூம் சாயபுவும் சிங்கை நேசனும்-ஓர் ஆய்வு” என்ற தமிழ் இலக்கிய நூல் வெளியீடுகண்டது…

விழாவின் முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய வரவானக் கவிஞர் தங்கமணியின் நிகழ்ச்சி நெறியாக்கம் எல்லோரும் பாராட்டும்படி அமைந்தது சிறப்பான ஒன்று…