பாவேந்தர் 126 - சுழலும் சொற்போர்

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களம் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பாரதியார் மற்றும் பாரதிதாசனாரின் படைப்புகளையும் கவித்துவத்தையும் போற்றும்,  விழாக்களை எடுத்து வருகிறது.

 
சிங்கையில் சீரோடும் சிறப்போடும் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்மொழி மாதவிழா வழமையாக இவ்வாண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. அதில் ஒரு அங்கமாக ‘’பாவேந்தர் 126 - சுழலும் சொற்போர்’’ என்ற தலைப்பில் உள்ளூர், வெளியூர் அறிஞர்கள் பங்குபெறும் சிறப்புரையோடு கூடிய வண்ணமயமான விழா நிகழவிருக்கின்றது.
 
அவ்விழாவினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமைக் காலை நிகழ்வாகக் கொண்டாடிட முடிவு செய்துள்ளோம். அதுபோது அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி  பாவேந்தர் 126 என்றுத் தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு நூலினை வழமைபோல இவ்வாண்டும் வெளியிட இருக்கின்றோம்.
 
அதன் பொருட்டு அறிஞர்கள் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் கட்டுரைகளைப் பெற்று நல்லமைவுடன் கூடிய நூலாக வெளியிட எத்தனித்துத் தங்களிடம் கட்டுரை கேட்டு இக்கடிதம் விடுக்கப்படுகிறது.
 
எனவே அன்பு கூர்ந்து பாரதி, பாரதிதாசன் பாடல்களை மையமாகக் கொண்டு கட்டுரை ஒன்றை வடித்து மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் எம்மை வந்தடையுமாறு தட்டச்சு செய்து மின் அஞ்சலிலும் முடியாமைக்கு அஞ்சலிலும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுவம். தட்டச்சு செய்யவியலாதார் கையெழுத்தில் தந்தாலும் நன்றே.  தாங்கள் எழுதவேண்டிய தலைப்புகள் இணைப்பில் உள்ளன.
நன்றி..
 
அன்பின்
 
 முனைவர் இரத்தின வேங்கடேசன்
தலைவர் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்