நிகழ்ச்சி விவரங்கள்:

 


சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணைந்து வழங்கும் கரிகாலன் விருதுக்கு சிங்கப்பூர், மலேசிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் ரகமத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையுடன் இணைந்து தமிழ்வேள் சாரங்கபாணி நினைவாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
 இதற்கு ரூ. 20 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து ஆண்டுதோறும் சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது. 

 

நிகழாண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸ் எழுதிய "அயல்பசி', மலேசியா எழுத்தாளர் பி. ராஜேந்திரன் எழுதிய "பண்பின் சிகரம்' ஆகிய நூல்கள் கரிகாலன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 14-இல் நடைபெறும் விழாவில் இருவருக்கும் கரிகாலன் விருது வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த அறக்கட்டளை சார்பில் "காப்பியங்களும், தமிழன் வாழ்வியலும்' என்ற ஆய்வுக் கட்டுரைக்கு உ.வே.சா. விருதும் வழங்கப்பட உள்ளதாக ரகமத் அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா தெரிவித்தார்.

 
 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices