தன்னம்பிக்கையை விதைக்கும் நிகழ்வு

நிகழ்வு:

அமெரிக்க கால்பந்து வரலாற்றில் பிரவுன் என்பவர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் களத்திலிருந்து தனது வெற்றிக்கோப்பைகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது முழங்கால் அளவிற்கே இருந்த சிறுவன் அவர் கால்களைச் சுரண்டினான்.
உடனே பிரவுன் அவ்ர்கள் திரும்பிப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று கேட்டார் அச்சிறுவன் பிரவுனைப் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்றான். இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு மீண்டும் காலை சுரண்டினான் அச்சிறுவன். அதற்கு அச்சிறுவனிடம் பிரவுன் உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று கேட்கிறார் அதற்கு அச்சிறுவன் நீங்கள் இதுவரை எத்தனை போட்டிகளில் விளையாடினீர்கள், எங்கெங்கு விளையாடினீர்கள், எத்தனை கோப்பைகள் வாங்கினீர்கள் என்பது எல்லாமே எனக்கு  அத்துப்படி என்றான். அதற்கு பிரவுன் வெரிகுட் என்று சொல்லிவிட்டு தனது கார் நோக்கி நடந்தார். காரில் ஏறும் தருவாயில் கார் கதவைத் திறக்க முற்படுகிறார் அவரது கால் சிறுவனால் மீண்டும் சுரண்டப்பட்டது. இம்முறை பிரவுன் சிறுவனைப் பார்த்து சற்று கோபமாக உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று உரக்க கேட்கிறார் அதற்கு அச்சிறுவன் பிரவுனைப்பார்த்து இவைகள் அத்தனையும் ஒருநாள் நான் முறியடிப்பேன் என்றான். அவன் யார் தெரியுமா?

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதில் காசு கொடுத்து கால்பந்து பார்க்க வசதியில்லாதவன். அவன் தான் பின்னர் அமெரிக்க கால்பந்தாட்டத்தில் தனி முத்திரை பதித்தவன். அவர் கால்பந்தாட்டத்தில் ஒரு புயல் சுழன்று அடிப்பது போல் அவர் களத்தில் இறங்கினால் எதிரணி பஞ்சாய் பறந்து விடும். கால்பந்தாட்டத்தில் அவர் சாதிக்காத சாதனைகளே இல்லை எனலாம். கோடி கோடியாய் பணம் புகழ் என்று சம்பாதித்தவர் ராக்கெட்டின் மூக்கின் மேல் உட்கார்ர்ந்து கொண்டு புகழின் உச்சிக்கே போனவர் அவர் தான் ஓ.ஜே. சிம்ஸன்.

நிகழ்வோடு ஒரு சிந்தனை:

ஓ.ஜே. சாம்ஸனின் இளமைக்கால தன்னம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் என்றே நம்புகிறேன்.இந்தியா இளமையான நாடு ஆம் தன் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இளைஞர்களைக் கொண்ட நாடு ஆனால் இளைஞர்களின் பங்களிப்பும் ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை. விளையாட்டுத் துறையிலும் இவர்களின் வளர்ச்சியை இன்னமும் எட்டவில்லை அப்படியே எட்டிப்பார்த்தாலும் அதற்கு ஆளும் அரசாங்கங்கள் முனைப்பு காட்டுவதில்லை என்பதே முதற்காரணம்.

ஓ.ஜே. சிம்ஸன் போன்ற இளைஞர்கள் போலும் எண்ணற்ற இளைஞர்கள் நிரம்பிக் கிடக்கும் நாடு இது. அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் அணியும் காலணியால் துச்சமென மிதிபடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை. இது மாற வேண்டும். இளைஞர்கள் இன்னும் இன்னும் விளையாட்டிலும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட முனைந்திட வேண்டும் நல்லோர்கள் கைகொடுப்பார்கள் எனும் நம்பிக்கையோடு. வெளிநாட்டினர் தயாரிக்கும் பொருட்களைத் தான் இறக்குமதி செய்து வெட்கமின்றி வாங்கிப் பயன்படுத்துகிறோம் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் சிந்தித்தால் இந்தியா உலக நாடுகளுக்கே சவால் விடும் காலம் வெகு அருகில்.